Header Ads

test

யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் மர்மம்.

 யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி ஒருவர் அவருடைய வீட்டிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை.

சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.

குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான தொடர்ந்து இடம்பெற்று வரும் மருத்துவபீட மாணவர்களின் இறப்பில் சந்தேகம் உள்ளது , கொலையா? தற்கொலையா? எனும் கோணத்திலும் விசாரணை இடம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.


No comments