Header Ads

test

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டி வைத்த பொது மக்கள்.

 இரவுவேளை தனியே தெமது கிராமத்துக்குள் சென்ற பொலிஸ் அதிகாரியை பிடித்த பொதுமக்கள் அவரை கட்டி வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டி வைக்கப்பட்ட குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சிலாபம் – அம்பகந்தவில என்ற மீனவக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீன்பிடிப் படகில் தொழில்புரிகின்ற மீனவர் ஒருவரது இளவயது மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி லலித் ரோஹண கமகே என்பவரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது, அண்மையில் இரவுவேளையில் குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது பிரதேசவாசிகளால் கையும் மெய்யுமாகப் பிடித்து கட்டிவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த பொலிஸ் அதிகாரி திருமணமாகாதவர். இந்நிலையில் கிராம மக்கள் இணைந்து வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.


No comments