Header Ads

test

இரு இளைஞர்கள் மீது பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதல்.

 மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் வவுணதீவு பொலிஸாரினால் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுணதீவு பகுதியில் வைத்து 5.9.2021 அன்று இரவு 8 மணியளவில் தாக்குதல் சம்பவமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவசர தேவை கருதி தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் தனது ஊந்துருளிக்கு எரிபொருள் நிரப்பி விட்டு வீடு திரும்பிய இரு சகோதரர்கள் மீதே மோட்டார் வாகனத்தை நிறுத்தி துப்பாக்கியால் சரமாரியாக முகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டு முகத்தில் பல தையல்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினேஷ் 8656 எனும் இலக்கம் உடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments