யாழ்.கொடிகாமத்தில் வீதி விபத்தில் பலியான இளைஞனின் மரணத்தில் சந்தேகம்.
யாழ்.கொடிகாமம் - காரைக்காட்டு வீதியில், வீதி விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் விபத்தில் இறக்கவில்லை எனவும் அது திட்டமிட்ட கொலை எனவும் இளைஞனின் குடும்பத்தினர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 14ம் திகதி இரவு கொடிகாமம் - கோயிலாமனை பகுதியை சேர்ந்த இ.நவர்ணன் (வயது24) என்ற இளைஞன், மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் இளைஞனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவருடைய பெற்றோார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த விடயம் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சோி நீதிமன்ற நீதிவான் யாழில் உள்ள மரண விசாரணை அதிகாரி ஊடாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
Post a Comment