Header Ads

test

இலங்கையில் சடுதியாக குறைவடைந்த கொவிட் மரணங்கள்.

 இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 30 ஆண்களும் 36 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில் ஒரு ஆணும், ஒரு பெண்ணுமாக இருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 06 ஆண்களும், 05 பெண்களுமாக 11 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 23 ஆண்களும் 30 பெண்களுமாக 53 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,284 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments