ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள காட் போட்டில் உருவாக்கப்பட்ட சவப்பெட்டியின் விலை.
கொரோனா வைரஸினால் உயிரிழக்கின்றவர்களின் உடல்களை எரிப்பதற்கு மற்றும் அடக்கம் செய்வதற்காக இலங்கையில் காட் போட்டில் தயாரிக்கப்பட்ட பெட்டிகள் உலகப் பிரசித்தமாகியிருக்கின்றன.
இந்நிலையில் இதன் விலை குறித்த தகவல் இன்று வெளியாகியுள்ளது. இதன் அதிபகட்ச விலை இரண்டாயிரம் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக கோவிட் மரணங்கள் ஏற்பட்டதால் தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினரான பியந்த சஹபந்துவின் ஆலோசனையின் பேரில் இந்த காகித சவப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment