Header Ads

test

இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் - இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம் - ஜனாதிபதிக்கு அனுப்ப பட்ட கடிதம்.

 உயிர்த்தஞாயிறு தாக்குதலைப் போன்றதொரு தாக்குதல் மீண்டும் நாட்டில் நடத்தப்படலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை விசேட கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

சிவில் மற்றும் நபர்களின் ஊடாக பாதுகாப்பு பிரிவை தைரியப்படுத்தும் வகையிலான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதற்கான சூழ்ச்சி நாட்டிற்குள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் இருப்பதாக அந்தக்கடிதத்தில் பொதுபல சேனா குறிப்பிட்டுள்ளது.

மேலும், மிகச்சிறிய பாதுகாப்பு விரிசலைப் பயன்படுத்தி அதனூடாக ஈஸ்டர் தாக்குதலைப் போன்ற ஒரு தாக்குதலை நடத்த அடிப்படைவாத அமைப்புகள் திட்டமிட்டுவது போன்ற பாரிய ஆபத்து நாட்டிற்கு முன்பாக இருக்கின்றது என்றும் ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அடிப்படைவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளியெறியத்தக்கதாக பாதுகாப்புக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான அவசியத்தையும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நாட்டில் செயற்படுகின்ற மேலும் சில அடிப்படைவாத மற்றும் இனவாத அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.    


No comments