பொருளாதார வளமிக்க நாட்டை கட்டியெழுப்புவதே தனது நோக்கமென ஜனாதிபதி தெரிவிப்பு.
மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தையும் வளமான நாட்டையும் உருவாக்குவதே ஜனாதிபதியின் நோக்கம் என ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் முகமாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் நெல், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment