Header Ads

test

பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை நேரில்ச் சென்று சந்திக்கவுள்ள நாமல்.

 அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்த கொடுமைகள் நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளைக் நேரில் சென்று பார்வையிட விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று நேரில் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள், அமைச்சர் நாமல் ராஜபக்சவை அவசரமாக சந்திக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து அமைச்சர் இன்று சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளின் நிலை குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments