Header Ads

test

நாட்டை வந்தடைந்த பிரதமர் மஹிந்த.

 G20 சர்வமத மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானத்தில் நள்ளிரவு 12.01 மணிக்கு பிரதமரும் மற்ற குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மற்றும் பிற பிரதிநிதிகள் குழுவும் இத்தாலி விஜயத்தை முடித்து நாடு திரும்பியுள்ளனர்.


No comments