Header Ads

test

நாட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் அரிசித் தட்டுப்பாட்டால் ஏற்பட போகும் பேராபத்து.

 இலங்கையில் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதனை தவிர்க்க முடியாதென தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அரிசி மற்றும் நெல்லுக்கு இடையே அரசாங்கம் கடுமையான சிக்கலை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - 

நாடு திறக்கப்பட்டவுடன் இந் நிலைமை ஏற்படும் என தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பொருட்களும் பாரியளவு விலை அதிகரித்துள்ளதுடன் நெல்லுக்கு தேவையான கட்டணத்தை அரசாங்கம் செலுத்துவதில்லை இதன் காரணமாக பாரிய அநீதிக்குள்ளாகியுள்ள விவசாயிகளால் நெல் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரிசி உற்பத்தி தடைப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கு 50 வீதம் அரிசி உற்பத்தி தடைப்பட்டுள்ளது. நாட்டின் முடக்கநிலை தளர்த்தப்டும் போது உணவகங்கள் மீள திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் அரிசிகளின் தேவை அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments