நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபரீதம்.
மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத்தில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற காரும் மட்டக்களப்பில் இருந்து களுதாவளை நோக்கு சென்ற மோட்டர் சைக்கிளும் கிரான்குளம் வீதி வளைவு பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் களுதாவளை கடற்கரை வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் பிரசாத் என்ற இளைஞன் எனவும் காத்தான்குடி காவல்துறை தெரிவித்துள்ளது.
Post a Comment