Header Ads

test

மீண்டும் வெளிநாடு செல்ல தயாராகும் பிரதமர் மஹிந்த.

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வாரம், மருத்துவ தேவைக்காக சிங்கப்பூர் செல்லவிருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை மீது சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையோ அல்லது வேறு இலங்கைப் பிரஜைகளையோ சிங்கப்பூர் அரசாங்கம் தற்போதைக்கு நாட்டினுள் ஏற்பதாக இல்லை.

எனினும் நீண்ட நாட்கள் இலங்கை – சிங்கப்பூர் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வெறும் ஐந்து பேருக்கு மாத்திரமே பிரவேசிப்பதற்கான அனுமதியை சிங்கப்பூர் வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது பணிக்குழுவின் தலைவர் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் மூன்று பேர் அடுத்தவாரத்தில் சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தெரியவருகின்றது


.

No comments