வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக நால்வர் உயிரிழப்பு.
வவுனியாவில் இன்றையதினம்(01) நான்கு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் நேற்றைய தினம் வீட்டில் மரணமடைந்ததுடன் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியாகியிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தோணிக்கல், மகாறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம், இறம்பைக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
Post a Comment