யாழில் கொவிட் சடலங்களை தகனம் செய்வதில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கொவிட்-19 தொற்றினால் அதிகளவான மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான மின் தகனசாலையிலேயே சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன.
எனினும், அது பழுதடைந்த நிலையில் உள்ளதால் பாரிய அசெகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், புதிய மின்தகனசாலை உடனடியாக அமைப்பதற்கான சாத்தியமில்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டார்.
Post a Comment