இலங்கையில் சாதனை படைத்த இரு தமிழ் அரசில் கைதிகள்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய சிறைக் கைதிகள் இருவர், உயர் தரம் கற்பதற்கான தகுதியுடன் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
புலிகள் இயக்கத்துடன் தொடர்ப்புபட்டதாக மெகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரும் மற்றொரு கைதியுமே இவ்வாறு சித்தியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சைக்கு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தோற்றியுள்ளனர்.
மெகசின் சிறை மற்றும் வட்டரெக சிறைச்சாலை ஆகிய பரீட்சை நிலையங்கள் ஊடாக இவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இந் நிலையிலேயே அவர்களில் இருவர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.
Post a Comment