Header Ads

test

ரிஷாட் பதியுதீனுடன் பசில் ராஜபக்ச தொலைபேசியில் உரையாடல் - வெளிச்சத்துக்கு வந்த விடயம்.

 சிறையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் சிறைக்கூடத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசியின் ஊடாக ரிசாட் பதியுதீன் தொடர்பு கொண்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசியில் அரசாங்கத்தின் முக்கிய நபர்களுடன் அவர் உரையாடியமை தெரியவந்துள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரிசாட் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் உடன் தொடர்பு வைத்திருந்தாரா என்பது தொடர்பில் தொலைபேசியை வைத்து ஆராய்வதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் முயற்சி செய்தனர்.

இருந்த போதும் தற்போதைய அரசாங்கத்தின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் குறித்த தொலைபேசியில் ரிசாட் உரையாடி உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த தொலைபேசியை குற்றப்புலனாய்வு பிரிவின் உயரதிகாரி ஒருவர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே இந்த கையடக்க தொலைபேசி விவகாரம் விரைவில் காணாமல் போகக்கூடும் எனவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ரிசாட்டின் சிறைக்கூடத்தில் கண்டெடுக்கப்பட்ட கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டிருந்ததுடன் இதனை வழங்கிய சிறை அதிகாரிக்கும் இடம்மாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments