சாம்பிராணி கொழுத்தியதால் யாழில் பற்றி எரிந்த வீடு.
யாழ்ப்பாணம் ஆரிய குளத்திற்கு அண்மையிலுள்ள வீடு ஒன்றில் சாம்பிராணி கொழுத்தியபோது தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை குறித்த வீட்டார் தமது அறையில் சாம்பிராணியை கொளுத்தி விட்டு வீட்டுக்கு வெளியே சென்றுள்ளனர்.
இதன்போது திடீரென வீட்டிற்கு தீப்பற்றி இருந்ததை அவதானித்த அயலவர்கள் தகவல் வழங்கியதையடுத்து, வீட்டாரால் மாநகரசபை தீயணைக்கும் பிரிவிற்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாநகரசபை தீயணைக்கும் பிரிவினரால் தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் பல நகைகளும் எரிந்ததாக வீட்டார் தெரிவித்தனர்.
Post a Comment