Header Ads

test

மின்னல் தாக்கி குடும்பஸ்த்தர் பலி.

 யாழ்ப்பாணம், அச்சுவேலி, நாவற்காடு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இந்நபர், வயலில் வேலைசெய்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உடுப்பிட்டியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான தியாகராஜா மதனபாலன் (41) என்பவராவார்.

இவர் இலங்கை போக்குவரத்துச் சபையில் சாரதியாக கடமையாற்றிவந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான அச்சுவேலி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.


No comments