கொழும்பு தேவாலயம் ஒன்றில் குண்டுத்தாக்குதல் தொடர்பான அறிவித்தலால் ஏற்பட்ட பரபரப்பு.
கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல - போப்பிட்டிய - தூய நிகொலா தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறிய விடயம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வெடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளமையினால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கடற்படை அதிகாரிகள் சிலரால் தேவாலயத்திற்கு நேரில் சென்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தேவாலயத்தின் போதகர் ஜயந்த நிமல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“நேற்று காலை 10.05 மணியளவில் கடற்படை அதிகாரிகள் சிலர் கெப் வாகனம் ஒன்றில் தேவாலயத்திற்கு வரும் காட்சி அங்கிருந்த சீசீடீவியில் பதிவாகியுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் தான் தேவாலயத்தில் இல்லாதமையினால் ஊழியரிடம் பேசிய கடற்படை அதிகாரி ஒருவர், தேவாலயத்திற்கு வெடி குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி விளக்கம் கேட்டேன். அதற்கு நேரில் வந்து பதிலளிப்பதாக கடற்படைய அதிகாரிகள் கூறினார்கள். அதற்கமைய நேற்று மாலை மேலும் சில அதிகாரிகள் தேவாலயத்திற்கு வருகைத்தந்தார்கள்.
வெலிசர கடற்படை முகாமில் இருந்து வருகைத்து தாக்குதல் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்ட சம்பவம் தவறுதலாக இடம்பெற்றதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனை சரிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவதாக கடற்படை அதிகாரிகள் சிலர் தேவாலயத்திற்கு வந்து என்னிடம் கூறினார்கள்” என போதகர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் வினவிய போது, அது பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் தேவாலயத்திற்கு வந்த கடற்படை அதிகாரி தேவைக்கு அதிகமாக கருத்து வெளியிட்டுள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment