Header Ads

test

யாழில் விபத்தில் சிக்கிய சாரதி பல மணி நேர போராட்டத்தின் பின் மீட்பு.

 யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றிரவு பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையிலும், மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தின் சாரதி நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


No comments