Header Ads

test

ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அறிவிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் 81 மேலதிக வாக்குகளினால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 132 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள கொரோனா நிலைமைக்கு மத்தியில் அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தை தடையின்றி மக்களுக்கு வழங்க ஜனாதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்த அவசரகால விதிமுறைகளை வர்த்தமானி ஊடாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments