ஐ.நா மனித உரிமைப்பேரவை அமர்வை மையப்படுத்தி புலம் பெயர் அமைப்புகள் நீதி கோரி போராட்டம்.
ஐ.நா மனித உரிமைப்பேரவை அமர்வை மையப்படுத்தி புலம் பெயர் அமைப்புகள் மேற்கொண்டுவரும் நீதிகோரும் போராட்டங்கள் இரண்டு வாரகாலத்தை கடந்தும் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தன.
தியாகி திலிபனின் உண்ணாநிலை போராட்டத்தின் முதல் நாளை புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் பிரதிபலித்திருந்தனர்.
அந்த வகையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் லண்டன் முதல் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் நேற்று முன்தினம்(14) ஆம் நாள் மாலையில் பிரான்சில் இருந்து சுவிசின் பாசல் நகருக்குள் நுழைந்திருந்தது.
சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும், தமிழீழ சுதந்திர தேசமே தமிழருக்கான தீர்வு என்ற கருப்பொருளில் இடம் பெற்றுவரும் இநதப்பயணத்துக்கு பிரெஞ்சு தொலைக்காட்சி சேவை ஒன்று முக்கியத்துவம் வழங்கி செய்திவெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 23 தடவைகளாக நடைபெற்றுவரும் இந்த மிதிவண்டி பயணத்தில் மாநகர சபைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனான சந்திப்புக்கள் நடைபெற்றுவருகின்றன.
இதேபோல தமிழ்ப்பண்பாட்டு வலையம் மற்றும் அனைத்துலக மனித உரிமைச்சங்கம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் ஐ.நா மனித உரிமைபேரவை முன்றலில் இன்றும் தமிழினப் படுகொலைக்குரிய சாட்சியப்பதிவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Post a Comment