கொழும்பு வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் திருமலையில் ஒருவர் கைது.
கொழும்பு நாராஹேன்பிட்டிய தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய , திருகோணமலை பகுதியில் வைத்து 22 வயதான இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கைக்குண்டை தயாரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 14ம் திகதி நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதேவேளை கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment