இலங்கையில் தலைவிரித்தாடும் கொவிட் மரணங்கள்.
இலங்கையில் நேற்றைய தினம் (05) மேலும் 180 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரது மொத்த எண்ணிக்கை 10,320 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 97 ஆண்களும், 83 பெண்களும் உயிரிழந்துள்ளதுடன், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோராக 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாட்களில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்த நிலையில் மீண்டும் 180பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment