அவசர அவசரமாக சி.வி.விக்கினேஸ்வரன் மனித உரிமைகள் ஆனையாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதம்.
இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள அவசர கால சட்டம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெஷலேவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சட்டம் காரணமாக வட மாகாணத்தில் மேலும் சில காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த முயற்சி செய்யலாம் என்றும் அவர் தனது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்று திரளும் சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக இந்த சட்டம் அமைவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment