Header Ads

test

சன்மானம் பெறுவதற்காய் வைத்தியசாலையில் கைக்குண்டு வைத்த நபர் அதிரடியாக கைது.

 நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பத்தில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவரே இக் கைக்குண்டை வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கைக்குண்டை வைத்த நபரே, கைக்குண்டு உள்ளமை தொடர்பான தகவலையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவல் வழங்கியமைக்காக வழங்கப்படும் பணத் தொகையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இந்த திட்டம் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (14) கைக்குண்டொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments