Header Ads

test

திருகோணமலையில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன்.

 திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிப்பொத்தானை - சதாம் நகர் பகுதியைச் சேர்ந்த அலிபுல்லாஹ் அர்ஸான் (20 வயது) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வீட்டில் இருந்த இளைஞரை காணவில்லை என உறவினர்கள் தேடியபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும், பின்னர் உறவினர்கள் இளைஞரின் சடலத்தை இறக்கியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும், மரணத்திற்கான காரணம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments