இராணுவத் தளபதியின் விசேட அறிவித்தல்.
நாட்டில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்கள் துரிதமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த வயது பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந் நிலையில், 30 வயதிற்கு மேற்பட்ட 11.4 மில்லியன் பேரை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 10.54 மில்லியன் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
Post a Comment