Header Ads

test

மதுவில் மயங்கி உயிரை மாய்த்த கணவனும் காயங்களுடன் மனைவியும்.

 யாழ். அல்லைப்பிட்டியில் மதுபோதையில் நபரொருவர் தற்கொலை செய்ய தனக்குத் தானே பெற்றோல் ஊற்றியபோது அடுப்பில் பெற்றோல் பாய்ந்து நெருப்பு எரிந்தமையால் கணவன் உயிரிழந்ததோடு,மனைவி எரிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன்போது அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 48 வயதுடைய சோமசேகரம் ரவிச்சந்திரன் என்னும் 10 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக சகோதரர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியில் தனக்குத் தானே பெற்றோலினை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது பெற்றோல் சமையல் அடுப்பில் ஊற்றுப்பட்டு பற்றி எரிந்தமையால் சமையலில் ஈடுபட்டிருந்த மனைவி மீது நெருப்பு பற்றிக்கொண்டதுடன்,கணவர் மீதும் தீப்பற்றியுள்ளது.

இதன்போது உடனடியாக வீட்டார் இருவரையும் யாழ். போதனா வைத்தியசாலையில்அனுமதித்த நிலையில், கணவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில்,மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். 


No comments