Header Ads

test

ஒரு வருடத்திற்கு குழந்தை பெற்றுகொள்ள இலங்கையில் தடை.

 இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக, கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றினால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

டெல்டா தொற்று தற்போது பரவி வருவதனால் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக, சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கொவிட் என்பது புதியதொரு நோய், அது குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் கிடையாது. கொவிட் நாளுக்கு நாள் வீரியம் அடைந்து, புதிய புறழ்வுகள் ஏற்பட்டு வருகின்றது.

தாய்மாருக்கு கொவிட் வைரஸினால் பிரச்சினை கிடையாது என சுகாதார தரப்பினர் ஆரம்ப காலத்தில் தெரிவித்திருந்தனர். எனினும், தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.

கர்ப்பணி தாய்மாருக்கு கொவிட் வைரஸ் தொற்றுமானால், அது அதியுயர் அபாயகரமான நிலைமையாகவே கருத வேண்டும்.

ஏனெனில், கொவிட் வைரஸ் கர்ப்பணித் தாய்மார்களை தாக்கினால், அது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்தான விடயம். எனவே, தம்பதியினர் விரும்பினால், குழந்தை பெற்றெடுப்பதை, ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு கோருகின்றேன் எனக் கூறியுள்ளார்.



No comments