சம்மாந்துறையில் தொடர்ச்சியாக பற்றி எரியும் நாணல் காடுகள்.
சம்மாந்துறை -சவளக்கடை பொலிஸ் எல்லைப் பகுதிகளில் உள்ள நாணல் காடுகள் கடந்த 3 தினங்களாக எரிந்து கொண்டிருக்கிறன.
இதனால் குறித்த பகுதியை சூழவுள்ள சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ,மருதமுனை, பெரியநீலாவணை பகுதிகளில் எரிந்த நாணல் கீற்றின் சாம்பர் துகள்கள் வீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
ஆற்றுப்படுகையில் தீ பரவல் மீண்டும் ஏற்பட்டதால் நாணல் மூங்கில் சருகு எரிந்து நாசமாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 3 தினங்களாக இப்பகுதியில் வீசும் கடும் காற்றினால் குறித்த நாணல் காடுகள் உராய்வுக்கு உள்ளாக எரிந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை சில இனந்தெரியாதவர்களினால் பறவை மிருக வேட்டைக்காவும் குறித்த நாணல் காடுகள் எரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அப்பகுதியில் உள்ள கிட்டங்கி ஆற்றின் மருங்கிலும் இவ்வாறான மூங்கில் சருகு நாணல்கள் காய்ந்து காணப்படும் நிலையில் நேற்றுமாலை அங்கு திடீரென தீப்பிடித்தது. இதன் காரணமாக பறவைகளின் கூடுகளும் நாசமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment