வவுனியாவில் இன்று இடம்பெற்ற கோர விபத்து.
வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இன்று மாலை (25) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும், துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment