நாட்டில் மேலும் விலை அதிகரிக்கப்படவுள்ள அத்தியவசிய பொருட்கள்.
பால்மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கை செலவுகள் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கபெற்றால் மாத்திரமே இந்த நடைமுறை அமுலுக்கும் வரும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெறுமாயின், ஒரு கிலோகிராம் பால்மாவின் விற்பனை விலை 1,145 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment