Header Ads

test

பிரபல விடுதியின் நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற மனதை உலுக்கும் சம்பவம்.

 நீர்கொழும்பு - குடாப்பாடு பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் விடுதியிலுள்ள நீச்சல் தடாகத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு குடாப்பாடு லுவீஸ்பிலேஸ் பகுதியி்ல் வசித்து வந்த டெரன்ஸ் பெர்னாண்டோ (36) என்ற ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி இரவு பணிக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் விடுதியினை சோதனையிட்ட போதே அவரது உடல் நீச்சல் தடாகத்தின் உள்ளே இருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த நீர்கொழும்பு நீதிமன்ற பதில் நீதவான் இந்திக டி சில்வா சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு  உத்தரவிட்டுள்ளார்.


No comments