கொவிட் தொற்றுக்குள்ளான பெண் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
ஆறு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் பிரசவத்தின் மூலம் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என புத்தளம் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சக்கிலா மடுவந்தி ராஜபக்ஷ என்பவர் புத்தளம் கிவுலாவைச் சேர்ந்த தாய் ஒரு ஆண் குழந்தை மற்றும் இரண்டு பெண்குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மூன்று குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment