Header Ads

test

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

 வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் போது பொருட்களை கொண்டு வருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல தெரிவித்தார்.

அண்மையில் மத்திய வங்கியினால் 623 பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பும் போது குறிப்பிட்ட பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

623 பொருட்களை இறக்கு மதி செய்வதற்கு மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள்.

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது. இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டுமே. என்று குறிப்பிட்டார்.


No comments