Header Ads

test

கொவிட் தொற்று காரணமாக யாழில் மேலும் ஐவர் உயிரிழப்பு.

 யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 88 வயதான ஆண் ஒருவரும், அல்வாய் பகுதியை சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவரும், பருத்தித்துறையில் விட்டில் உயிரிழந்த 81 வயதான பெண் ஒருவரும், சாவகச்சோியில் 74 வயதான பெண் ஒருவருக்கும், மந்துவிலை செர்ந்த 65 வயதான பெண் ஒருவருமாக ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments