திருவலைக் கட்டையால் கணவனை அடித்துக்கொன்றுவிட்டு கள்ள காதலனை காப்பாற் துடிக்கும் பெண்.
யாழ்.அரியாலை - பூம்புகார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நபர் ஒருவர் தேங்காய் திருவலையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி உட்பட இருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
து.செல்வக்குமார்(வயது32) என்பவர் தேங்காய் திருவலையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் மனைவி மற்றும் மனைவியுடன் தகாத உறவிலிருந்த நபரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இருவரையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கணவனை கொலை செய்ய கள்ள காதலுனும் உதவியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் அறியப்பட்டிருந்தது. அதனை கொல்லப்பட்டவரின் மனைவியும் ஏற்றிருந்தார். ஆனால் பின்னர் கொலையை தான் மட்டும் செய்ததாக கூறியுள்ளார். பின்னர் கள்ள காதலன் கணவனின் கழுத்தை காலால் அழுத்தியிருக்க தான் தேங்காய் திருவலையால் அடித்து கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் இரண்டாவது சந்தேக நபருக்கு 40ற்கு மேற்பட்ட கொள்ளை, திருட்டு மற்றும் வன்புணர்வு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment