யுவதி ஒருவர் செய்த மிக கொடூரமான செயல்.
நுவரெலியா கெலேகால லோவர் கிப்ஸன் வீதியிலுள்ள வீடொன்றின் அருகில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி லூசகா குமாரியின் முன்னிலையில் நேற்று சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டு குறை பிரசவத்தில் குழந்தையை பிரசவித்த 25 வயதான திருமணமாகாத யுவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கெலேகால லோவர் கிப்ஸன் வீதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த 25 வயதான யுவதி, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விட்டார்.
இந்நிலையில் அதை வீட்டாருக்கு தெரியாமல் மறைத்து வந்த நிலையில், அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பெற்றோர் விசாரித்தபோது யுவதி 4 மாத கர்ப்பிணியாக இருந்தமை தெரியவந்தது. இதையடுத்து வீட்டாரின் நிர்ப்பந்தத்தினால் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டு, 6 மாதத்தில் சிசு இறந்த நிலையில் பிரசவமான நிலையில் வீட்டுக்கு அருகிலுள்ள மின்கம்பம் ஒன்றின் அடியில் சிசுவை புதைத்துள்ளனர்.
சிசுவை பிரசவித்த யுவதிக்கு இரத்தப் போக்கு அதிகரித்த நிலையில், அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத ந் காரணமாக சந்தேகமடைந்த வைத்தியர்கள் வினவியதில், குறைமாதத்தில் சிசுவை பெற்றெடுத்து, வீட்டின் அருகில் புதைத்த தகவலை யுவதி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிசாரின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் (31) யுவதியின் வாக்குமூலத்தை பொலிசார் பெற்றனர். அதன்பின்னர், நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, நேற்று சடலத்தை தோண்டியெடுத்தனர்.
இரத்தக்கறை படிந்த துணியொன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் யுவதிக்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் யுவதியின் குடும்ப உறுப்பினர்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment