Header Ads

test

முல்லை மாந்தை கிழக்கில் குடும்பஸ்த்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சோகம்.

 முல்லைத்தீவு  மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா விவேகானந்தராசா (43) என்பவரே இவ்வாறு வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்து, மகனுடன் வசித்து வரும் நிலையில், நேற்று இரவு அவர் உறங்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு எதிரிலுள்ள அப்பம்மா வீட்டில் மகன் உறங்கச் சென்று விட்டார். இன்று காலையில் குறித்த நபருடன் தொடர்புடைய ஒருவர், மகனை அழைத்து, தந்தையின் தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, மகன் வீட்டுக்கு சென்று போதே, தந்தை உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.

நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்திருக்கலாமென கருதப்படும் நிலையில், அவரது கழுத்தில் சிறிய குத்துக்காயமும் உடலின் சில பகுதிகளில் இரத்தக்கறை தென்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments