முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு.
முல்லைத்தீவில் கடற்படையினரால் சட்டவிரோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு இன்று இரவு பொலீஸ் நிலையத்தில் சான்றுப்பொருட்களான வெடிபொருட்களையும் சந்தேகநபரையும் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டபோது சான்றுப்பொருளான வெடிபொருள் வெடித்து தீபற்றி எரிந்துள்ளது.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்துவதற்காக பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்து தீ பற்றி எரிந்துள்ளது.
வெடிபொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பொலீசாரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment