Header Ads

test

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் விபரீத முடிவால் ஏற்பட்ட சோகம்.

 பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொட, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments