கணவனை அடித்து மனைவி கொலை செய்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது.
யாழ்ப்பாணம் அரியாலை - பூம்புகார் பகுதியில் தமது கணவனை ஆயுதம் ஒன்றினால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் அரியாலை - பூம்புகார் பகுதியில் கணவனை ஆயுதம் ஒன்றினால் தாக்கி பெண்ணொருவர் நேற்று கொலை செய்த சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய நபரே கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பெண் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய, 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment