பொல்லால் தாக்கி நபர் ஒருவர் கொலை.
நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரியம்ப, தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மற்றைய நபரை பொல்லால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.
தம்பெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான குடும்பஸ்தரே இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் நாரம்மல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment