Header Ads

test

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலைக்கு அமைச்சர் ஒருவரின் வீட்டிலிருந்தே கைக்குண்டு எடுத்து வந்ததாக சந்தேக நபர் தெரிவிப்பு.

 நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையில் உள்ள கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, கொழும்பு - 07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இலலத்தில் இருந்து தாம் கொண்டுவந்ததாக, கைதுசெய்யப்பட்டவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


எவ்வாறிருப்பினும், சந்தேகநபரின் வாக்குமூலம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என, சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் இருந்து அண்மையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில், திருகோணமலை - உப்புவெளி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments