இலங்கையின் முன்னணி அறிவிப்பாளர் கைது.
முன்னாள் வானொலி தமிழ் அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான M.பரணிதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொரள்ளை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tocilizumab என்ற மருந்து வகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, விற்பனை செய்யும் நோக்குடன் தனது வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment