பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான முக்கிய புள்ளி.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான அமில பிரசன்ன ஹெட்டிஹேவ எனப்படும் ‘சன்ஷைன் சுதா’ பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மாத்தறை கொட்டாவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சன்ஷைன் சுதா பாதாள உலகத் தலைவரான ‘மகந்துரே மதுஷின்’ நெருங்கிய நண்பர் ஆவார்.
அத்துடன் 2019 இல் டுபாயில் ஆடம்பர விருந்தில் மதுஷுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் இஅவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment