வடமாகாண ஆளுநராகப் போகின்றாரா சுந்தரம் அருமைநாயகம்.?
வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் அடுத்த வாரம் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கு வெளிவிவகார ராஜாங்க அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
மேற் குறித்த சுந்தரம் அருமைநாயகம், யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தின் பல மாவட்டங்களில் இதற்கு முன்னர் அரசாங்க அதிபராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment