பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு.
கொழும்பு மோதரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இளம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுணன் இராகலை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணித்தவர் பொலிஸ் சேவையில் இணைந்து ஒரு வருடமே ஆனநிலையில் ”தனக்கு கொரோனா உள்ளது” எனக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மோதரை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தங்கும் அறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment